
ஓர் இலக்கியவாதியாகப் பரிணமித்த இவர் காலப்போக்கில் ஒரு கணிப்பொறி வல்லுநராய் மாறிப் போனார்.
கணிப்பொறி அறிவியலைச் சொந்தமாகவே கற்றுக் கொண்டு அதில் கரை கண்டார். பல மென்பொருள்களை உருவாக்கியுள்ளார்.
கணிப்பொறித் துறை அனுபவம்
ஓர் இலக்கியவாதியாகப் பரிணமித்த இவர் காலப்போக்கில் ஒரு கணிப்பொறி வல்லுநராய் மாறிப் போனார்.
கணிப்பொறி அறிவியலைச் சொந்தமாகவே கற்றுக் கொண்டு அதில் கரை கண்டார். பல மென்பொருள்களை உருவாக்கியுள்ளார். பத்திரிகைகளில் கணிப்பொறி தொடர்பாக நிறைய எழுதியுள்ளார்.
’கணிப்பொறிப் பாடங்களைத் தமிழில் எழுதிய முன்னோடி’ எனப் பெயர் பெற்றுள்ளார். கணிப்பொறி அறிவியலின் உயர்நிலைத் தொழில்நுட்பங்களை எளிதில் புரியும்படித் தமிழில் எழுதியுள்ளார்.
கணிப்பொறி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழக எம்சிஏ மாணவர்களுக்குப் பாடம் எடுத்துள்ளார். தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
கணிப்பொறி அறிவியலில் ஏராளமான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார்.