பல்கலைக் கழகக் கல்வி

14

Shared

மதுரைப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறையில் எம்.எஸ்சி. சிறப்புக் கணிதம் பயின்றார். உலகத் தரம் வாய்ந்த கணிதப் பேராசிரியர்களிடம் கணிதம் கற்றார். பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, தேர்வு முறை எல்லாமே அமெரிக்க, இங்கிலாந்துப் பல்கலைக் கழகங்களில் உள்ளது போன்றே இருந்தது. அவர்கள் வகுப்பில் பயின்ற சரிபாதிப்பேர் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதியிலேயே போய்விட்ட நிலையில் அவர் நன்றாகப் படிக்கும் மாணவன் எனப் பெயரெடுத்தார். முதல் வகுப்பும், இரண்டாம் ரேங்கும் எடுத்துத் தேறினார் (1974).

பட்டப் படிப்புக்குப் பிறகு எம்ஏ தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்றே அவருக்கு ஆசை. ஆனால் அவரது கல்லூரிக் கணிதப் பேராசிரியர் திரு.பவுன்ராஜா அவர்கள்  எம்எஸ்சி கணிதம்தான் படிக்க வேண்டும் என வற்புறுத்தினார். ”உனக்கு எம்.ஏ. படித்தவர்களைவிட அதிகமாகவே தமிழ் இலக்கிய அறிவு உள்ளது. இனிமேல் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. மேலும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரைவிடக் கணித வல்லுநர் ஒருவர் தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும் பேசினால் அனைவரும் அக்கறையோடு கேட்பார்கள்” என்பது அவருடைய அனுபவவாதம். அவர்தான்  மதுரைப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறையில் எம்.எஸ்சி. சிறப்புக் கணிதப் படிப்பில் சேர்த்து விட்டார். அய்ய நாடார் அறக்கட்டளையின் கல்விக் கடனையும் போராடிப் பெற்றுத் தந்தார். எம்.எஸ்சி. படித்து முடித்தபின் அவர்கள் கல்லூரியிலேயே அவர் கணித ஆசிரியாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவருடைய ஆசிரியர் ஆசைப்பட்டார்.

Related articles

Website created and maintained by Lenin and Jenny in the memory of their loving dad.