
1993-94 ஆம் ஆண்டுகளில் தினமலர் நாளிதழில் கற்போம் கம்ப்யூட்டர் என்னும் தலைப்பில் கணிப்பொறிப் பாடங்களைத் தமிழில் எழுதினார். 1994 முதல் 2006 வரை தமிழ் கம்ப்யூட்டர் இதழில் சி, சி++, சி#, நெட்வொர்க் பாடங்களை எழுதினார்.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி
1993-94 ஆம் ஆண்டுகளில் தினமலர் நாளிதழில் கற்போம் கம்ப்யூட்டர் என்னும் தலைப்பில் கணிப்பொறிப் பாடங்களைத் தமிழில் எழுதினார். 1994 முதல் 2006 வரை தமிழ் கம்ப்யூட்டர் இதழில் சி, சி++, சி#, நெட்வொர்க் பாடங்களை எழுதினார். கணிப்பொறி தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதினார்.
கணிமொழி இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2004-05 ஆண்டுகளில் தினமணி நாளிதழில் கம்ப்யூட்டர் A to Z என்னும் தொடரை எழுதினார். மனோரமா தமிழ் இயர்புக்கில் 1997 முதல் பல ஆண்டுகள் தொடர்ந்து, கணிபொறி, இணையம், பிணையம், மின்வணிகம், மின்வெளிச் சட்டங்கள், செல்பேசித் தொழில்நுட்பங்கள், வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சென்னை வானொலியில் காலை நிகழ்ச்சியில் தினமும் தொடர்ந்து இன்று ஒரு தகவல் போல, அதிநவீன அறிவியல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திப் பேசியிருக்கிறார்.
சன், சன் நியூஸ், விஜய் டீவியில் கணிப்பொறித் தகவல்களைக் கூறியிருக்கிறார். வின் டீவியில் ஒரு மணி நேரம் நேரடி ஒலிபரப்பில் பார்வையாளர்களின் கணிப்பொறித் துறை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார்.
மக்கள் டீவியில் சிறப்பு விருந்தினர் பகுதியில் கணிப்பொறி துறையில் பங்களிப்பு பற்றிய இவருடைய பேட்டி ஒளிபரப்பானது.