அவரது தமிழ் கையெழுத்து, எழுத்துருவாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பதிவிறக்கத்தில் இரண்டு எழுத்துரு வகைகள் உள்ளன. ஒன்று அவரது வேகமான கை எழுத்து, மற்றொன்று அச்சு. இரண்டு எழுத்துருக்களும் அதன் பீட்டா(beta) பதிப்பில் உள்ளன, நாங்கள் அவற்றை ழுமையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். வரும் பதிப்புகளில் அவரது ஆங்கில கையெழுத்தும் எழுத்துருவில் இணைக்கப்படும்.
Siva 01 சிவா 01 – அவரின் அச்சு கை எழுத்து
Siva 02 சிவா 02 – அவரின் வேகமான கை எழுத்து
இங்கே Siva 01 மற்றும் Siva 02 தமிழ் எழுத்துருக்களை (Font) உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவும் முறை கொடுக்கப்பட்டுள்ளது.
Windows கணினிக்கான வழிமுறை:
1. எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்தல்
எழுத்துருக்களைப் பதிவிறக்க “Download” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பைத் திறந்து உள்ளடக்கங்களை ஒரு கோப்புறையில் பிரித்தெடுக்கவும் (Extract)
உங்கள் கணினியில் Siva 01.ttf மற்றும் Siva 02.ttf கோப்புகள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
2. எழுத்துருக்களை நிறுவுதல்
முறை 1: Double-click மூலம் நிறுவுதல்
பதிவிறக்கிய .ttf கோப்புகளை கண்டுபிடிக்கவும்.
Siva 01.ttf மற்றும் Siva02.ttf கோப்புகளை இரட்டை கிளிக் செய்யவும்.
மேலே இருக்கும் “Install” பட்டனை அழுத்தி நிறுவவும்.

முறை 2: கைமுறையாக Font Folder-ல் சேர்த்தல்
C:\Windows\Fonts கோப்புறையை திறக்கவும். .ttf கோப்புகளை Copy செய்து, அங்கு Paste செய்யவும்.
3. நிறுவல் சரிபார்த்தல்
MS Word அல்லது Notepad போன்ற மென்பொருளை திறக்கவும்.
Font பட்டியலில் Siva 01 மற்றும் Siva 02 உள்ளதா என்பதை பாருங்கள்.
