மென்பொருள் உருவாக்கம்

14

Shared

1989-ஆம் ஆண்டிலேயே அவர்களுடைய அலுவலகத்தைத் தாளில்லா அலுவலகமாய் (Paperless Office) மாற்றி அமைத்தார். அதற்காகப் பாராட்டுச் சான்றிதழும், ஊக்கத் தொகையும் பெற்றுள்ளார். அவர்களுடைய அலுவலகம் ‘சிறந்த நிலையம்’ என்ற பெயரையும் பெற்றுள்ளது.

மென்பொருள் உருவாக்கம்

1986-87 இல் கணிப்பொறி ஓர் அபூர்வப் பொருளாய் இருந்த காலத்திலேயே இவர் பணிபுரிந்த அலுவலத்தில் இருந்த கணிப்பொறியில் மூழ்கிப் போனார். யாருடைய உதவியுமின்றி தானாகவே கற்றுக் கொண்டார். அலுவலகத்தில் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார்.

 

ஓராண்டு கடுமையான உழைப்பில் எம்எம்எஸ் (Mux Maintenance System) என்னும் மென்பொருள்களை உருவாக்கி, 1989-ஆம் ஆண்டிலேயே அவர்களுடைய அலுவலகத்தைத் தாளில்லா அலுவலகமாய் (Paperless Office) மாற்றி அமைத்தார். அதற்காகப் பாராட்டுச் சான்றிதழும், ஊக்கத் தொகையும் பெற்றுள்ளார். அவர்களுடைய அலுவலகம் ‘சிறந்த நிலையம்’ என்ற பெயரையும் பெற்றுள்ளது.

 

தமிழ்நாடு வட்டத் தொலைதொடர்புத் தலைமையகத்தில் பணிபுரிந்தபோது மிஸ்ட் (Management Information System for Telecom) என்னும் மேலாண்மைத் தகவல் மென்பொருளை உருவாக்கி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அலுவலகங்களில் அவற்றை நிறுவினார். பத்து நாட்கள் பாடுபட்டுத் தப்பும் தவறுமாகத் தயாரிக்கப்படும் மேலாண்மைத் தகவல் அறிக்கையை மென்பொருள் மூலமாகப் பத்து நிமிடத்தில் துல்லியமாகத் தயாரிக்க முடிந்தது.

 

மண்டலத் தொலைதொடர்புப் பயிற்சி மையத்தில் பணியாற்றிய காலத்தில் பயிற்சி முடித்த மாணவர்களின் இறுதித் தேர்வு முடிவுகளை தர வரிசைப்படி வெளியிடும் மார்க்சிஸ்ட் (MarkSyst) என்னும் மென்பொருளை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்களைக் கையாள மாக்பிஜி (Ministry of Communication Public Grievence) என்னும் மென்பொருளை உருவாக்கித் தந்தார்.

 

வளர்தமிழ் பதிப்பகத்துக்கு (வளர்தொழில், தமிழ் கம்ப்யூட்டர் வெளியீட்டாளர்) பத்திரிகைச் சந்தாக்களைக் கையாளும் சப்ஸ்கிரிப் (Subscrip) என்னும் மென்பொருளைத் தயாரித்துக் கொடுத்தார். ஏனோ அதனை அவர்கள் பயன்படுத்தவில்லை.

 

கர்நாடக மாநிலத்து தொலைதொடர்பு நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஓசிபி வகைத் தொலைபேசியகங்களில் மின்காந்த நாடாவிலிருந்து தொலைபேசி அழைப்புகளின் விவரங்களைப் படித்தறிவதற்காக ஓசிபிஎட்ரெட் (OCBEdRet – OCB Exchange Data Retrieval) என்னும் மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார். குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்பு விவரங்களைத் தோண்டியெடுத்து, எந்த நேரத்தில் யார்யாரோடு பேசினார்கள் என்று கண்டறியப் பயன்படும் மென்பொருள் அது. கர்நாடகாவிலிருந்து ஒவ்வொரு மாநிலமாகப் பரவி, நாளடைவில் இந்தியா முழுவதும் அந்த மென்பொருளைப் பரவலாகப் பயன்படுத்தினார்கள் என்று அவருக்கு வந்த மின்னஞ்சல்கள் தெரிவித்தன.

 

எம்.சி.ஏ. படிப்பின் திட்டப்பணியாக, தமிழ் ஓசிஆருக்குப் (Optical Character Recognition) பயன்படக் கூடிய, ஆவண உருவரை உணர்தலுக்கான (Document Layout Recognition) மென்பொருளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கினார்.

 

சென்னைத் தொலைபேசியின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணிபுரிந்தபோது, சென்னைத் தொலைபேசியின் கணிப்பொறித் தரவுத்தளத்தில் ஒற்றை வரியில் சேமிக்கப்பட்டிருந்த பத்து லட்சம் வாடிக்கையாளர்களின் வீட்டு முகவரியைப் பெயர், கதவெண், வீட்டுப் பெயர், தெரு, ஊர், வட்டாரம், நகர், பின்கோடு எனப் பிரிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கினார்.

 

Related articles

Website created and maintained by Lenin and Jenny in the memory of their loving dad.